ஒரே வருடத்தில் ஏழு படங்கள் - ரிலீசுக்கு தயாராகும் ஜி.வி.பிரகாஷ்

Share:


ஒரு பக்கம் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்தாலும் மறுபக்கம் படங்களுக்கு இசையமைக்கும் பணியையும் முடித்துக் கொடுக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

தமிழ் சினிமாவில் ஒரே வருடத்தில் அதிக படங்கள் நடிக்கும் கதாநாயகர்களில்  ஒருவர் விஜய் சேதுபதி மற்றொருவர் ஜி.வி.பிரகாஷ். தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ஏழு படங்களின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது.

100% காதல், குப்பத்து ராஜா, ஐங்கரன், அடங்காதே, ஜெயில், வாட்ச்மேன், 4 ஜி அந்த ஏழு திரைப்படங்கள். ஒரு பக்கம் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்தாலும் மறுபக்கம் படங்களுக்கு இசையமைக்கும் பணியையும் முடித்துக் கொடுக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

அவர் நடிக்கும் படங்கள் மட்டும் அல்லது மற்ற ஹீரோக்களின் படங்களுக்கும் குறித்த நேரத்தில் இசையமைத்து முடிக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இந்த ஏழு படங்களில் குப்பத்து ராஜா வரும் ஏப்ரல் 5 ஆம் தேதியும், வாட்ச்மேன் ஏப்ரல் 12 ஆம் தேதியும் வெளியாகிறது.

மற்ற படங்கள் இந்த வருடத்தில் ரிலீஸ் ஆவதற்கு தயார் நிலையில் உள்ளன. இரவு நேரங்களில் கம்போசிங் பகலில் படப்பிடிப்பு என படுபிசியாக இயங்கிக் கொண்டிருந்தாலும் சமூக வலைத்தளங்களில் சமூகப் பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பதிலும், நேரடியாக களத்திற்கு சென்று உதவுவதிலும்  ஜி.வி.பிரகாஷ் தவறுவது இல்லை.

Kuppathu Raja 👑 Trailer Crossed 2M+ 🔥Views In YouTube 👏❤ With Massive Response From Audience

#2MillionForKuppathuRaja

No comments